நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள திருத்தலம் திருவேட்டக்குடி. இங்குள்ள இறைவனின் பெயர் அழகர், இறைவி சாந்தநாயகி. சிவபெருமான் வேடுவனாக வேடம் புனைந்து வந்த திருத்தலமாதலால் இங்குள்ள இறைவன் இடது கரத்தில் வில்லையும், வலது கரத்தில் திரிசூலமும் ஏந்திக் காட்சி தருகிறார். முருகப்பெருமானும் தந்தையைப் போன்று வேடுவகோலம் பூண்டுள்ளது தனிச் சிறப்பாகும்.