பதிவு செய்த நாள்
18
பிப்
2014
10:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழாவை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடந்தது. மாசி திருவிழாவின், 11ம் நாளான, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல், குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன், தெப்பக்குளத்தில் உள்ள, நகரத்தார் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, உபயதாரர்கள் சார்பில், சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு, 11:30 மணிக்கு, தெப்பத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி எழுந்தருளினார். தெப்பத்தில், 11 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், அதிகாலை, சுவாமி, சிவன் கோவிலை வந்தடைந்தார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.