பதிவு செய்த நாள்
19
பிப்
2014
11:02
கோர்பா: இந்து கடவுள் விஷ்ணு, தனது ராம அவதாரத்தில், மனைவி சீதா மற்றும் தம்பி லட்சுமணனுடன், 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அப்போது, அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின், கோர்பாவில் உள்ள குகைகளில் வசித்துள்ளனர். இந்த குகை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தொல்லியல் ஆய்வு துறை தெரிவித்துள்ளது. ஒரு குகையில், இந்து கடவுள் ராமர், சீதா மற்றும் லட்சுமணனின் சிலைகள் உள்ளன. இந்த கோவில் சத்தியுகத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு, சீதையின் கால் பாதங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.