வேலூர்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க., சார்பில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் கார்த்தியாயினி தலைமை வகித்து, தங்க ரதத்தை இழுத்தார். துணை மேயர் தருமலிங்கம், வேலூர் கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் அப்பு, வேலூர் மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் வள்ளலார் ரமேஷ், கவுன்சிலர்கள் பரத்குமார், ராசா, சிவாஜி, குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.