பதிவு செய்த நாள்
20
பிப்
2014
11:02
திண்டிவனம் : திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியம் நல்லாத்தூர் வெள்ளை மலை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 17ம் தேதி காலை 9.30 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.மாலை 5 மணிக்கு முதல் காலபூஜையும், 18 ம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடந்தன. காலை 9.15 மணிக்கு செல்வவிநாயகர், முத்தாலம்மனுக்கும், 9.45 மணிக்கு கெங்கையம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.15 மணிக்கு பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை அச்சிறுபாக்கம் சங்கர சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் உமா பழனி, துணை தலைவர் பழனி, கோவில் நிர்வாகிகள், தர்மகர்த்தா ஆதிகேசவன், முத்து, சண்முகம், ஏழுமலை , மாரியப்பன், விஜயகுமார், மகேந்திரன் செய்திருந்தனர். பூசாரி கண்ணன், ஸ்தபதி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.