மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் பஞ்ச பூத அலங்காரத்தில் சுவாமி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2014 10:02
மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், காலஹஸ்தீஸ்வரர், ஆதிமூலர் ஆகிய பஞ்ச பூத அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.