புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில், மகா சிவராத்திரி விழா நாளை நடக்கிறது.கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில், நாளை (27ம் தேதி) மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையுடன் மகா சிவராத்திரி விழா துவங்குகிறது. இரவு 9:00 மணி முதல் 10:00 வரை இரண்டாம் கால பூஜை நடக்கிறது.நள்ளிரவு, மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4:30 மணி முதல் 6:00 வரை நான்காம் கால பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு நிர்வாகிகள், கோவில் குருக்கள் செய்துள்ளனர்.