புதுச்சத்திரம்: பூவாலை அங்காளம்மன் கோவிலில் 17 வது ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 17வது ஆண்டு மயானக் கொள்ளை நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி இரவு 9:00 மணிக்கு வாழைக்குளத்தில் இருந்து கரகம் புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மயானக் கொள்ளை நடந்தது. விழாவையொட்டி, அங்காளம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மேலும், காளி, அங்காளம்மன் வேடமணிந்து சென்றனர். விழாவில் பூவாலை பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பூவாலை கிராம பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.