பதிவு செய்த நாள்
12
மார்
2014
10:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், மாசி - பங்குனி பெரு விழா கொடியேற்றம்,காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயில் மாசி - பங்குனி விழா, நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4.15 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 5.35 மணி முதல் 6.42 மணி வரை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.17 வரை விழா நடக்கிறது. வரும் 18ம் தேதி திருக்கோயில் கரகம், மது, முளைப்பாரி, 19ம் தேதி பூக்குழி இறங்குதல், பால்குட நிகழ்ச்சி, முளைப்பாரி புறப்பாடு, காப்பு பெருக்குதல் நடக்கிறது. 20ம் தேதி, அம்மன் திருவீதி உலா, 21ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அய்யர் சிவமணி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா செய்து வருகின்றனர்.