விருத்தாசலம்: பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கொளஞ்சியப்பர் சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, தினமும் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் சித்தி விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், கொளஞ்சியப்பர் சுவாமி யானை வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.