குறிச்சி: கோணவாய்க்கால் பாளையம் கருப்பராயன் சுவாமி கோவிலின் 70-ம் ஆண்டு திருவிழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி இன்று காலை 9.00 மணிக்கு பூச்சாட்டுதலும், இரவு 9 00 மணிக்கு கருப்பராயன் சுவாமி கோயிலிலிந்து போத்தனூர் பேச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை அதிகாலை 5.00 மணிக்கு பேச்சியம்மன் கோவிலிலிருந்து மலைநாட்டு வாத்தியங்கள் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி, சுவாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைதலும், மதியம் 12.00 மணிக்கு உச்சி பூஜையும், மாலை 4.00 மணிக்கு மாவிளக்கு ஊர்லவமும் நடக்கிறது. இறுதிநாளான 21-ம் தேதி மதிகாலை 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மதியம் 12.00 மணிக்கு உச்சிகால அபிஷேக பூஜையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கின்றன.