காஞ்சிபுரம் அனேகாதங்காவதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அனேகாதங்காவதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. அனேகாதங்காவதேஸ்வரர் கோவில், பல்லவர் காலத்திற்கு முற்பட்ட பழமையான கோவில். முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற கோவில்களில், சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்றது. கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில், இந்த கோவில் அமைந்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், கடந்த ஜனவரி மாதம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 22ம் தேதி கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. நேற்று காலை 9:45 மணிக்கு மூலவர் விமானத்தில் உள்ள கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.