குமாரகோவில்: வேளிமலை குமாரசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண திருவிழா, ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவுற்றது. இக்கோயிலில் விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரை 7 நாள்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிறைவு நாளான நேற்று கோயில் தெப்பகுளத்தில் ஆறாட்டு மற்றும் சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.