முக்கியமான விரதம் வரும் நாளில் தான் பாழாய் போன ஜலதோஷம் வந்து நம்மை குளிக்க முடியாமல் செய்து விடும். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா என்றால்.. ஒரு சில இருக்கிறது.
* சிவசிவ, ஓம் முருகா, ஓம் சக்தி விநாயக நமஹ, ஓம் சக்தி. ஓம் நமோ நாராயணாய என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம் என்பர். * உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம் என்பர். * உடல் முழுவதும் திருநீறு பூசினால் குளித்ததற்கு சமம். இதை ஆக்நேய ஸ்நானம் என குறிப்பிடுவர். * உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து அங்கே பசுவின் குளம்படி பட்ட மண் இருந்தால் அதைப் பூசிக் கொள்ளலாம். இதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். * விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டமிருந்து, நல்ல வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை திவ்ய ஸ்நானம் என்பர். இதில் எதுசாத்தியமோ, அதைக் கடை பிடியுங்களேன்!