நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பங்குனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.