மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்திற்கான பூஜை நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகம் செய்யப்பட்டது. பின் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.