காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 05:04
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷப கொடி ஏற்றப்பட்டது. பின், விநாயகர், சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் புறப்பாடு நடந்தது. பின் நவசந்தி, யாக பூஜை தீபாரதனை நடந்தது. நாளை (5ம் தேதி) பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷபவாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 10ம் தேதி திருக்கல்யாணம், 12ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 15ம் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.