காரைக்கால் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 05:04
காரைக்கால்: மேலகாசாகுடி வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாக்குடியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக நிறைவு பெற்று, முதலாம் ஆண்டு துவக்கத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வதரதராஜ்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு சம்பத்ரா அபிஷேக ஹோமமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாவிக்குழுவினர் மற்றும் மேலகாசாக்குடி கிராம வாசிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.