பதிவு செய்த நாள்
05
ஏப்
2014
10:04
சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன், நேற்று காலை துவங்கியது. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து, நெய்யபிஷேகம் மற்றும் உஷபூஜைக்கு பின், காலை 9:30 மணிக்கு, கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. நெற்றிப்பட்டம் சூட்டிய யானை, கொடி மரம் முன் நிற்க, மேள தாளம் முழங்க, பூஜிக்கப்பட்ட கொடி, கோவிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டு, தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இன்று முதல், 12ம் தேதி வரை, தினமும் மதியம் உச்சபூஜைக்கு பின், உற்சவபலி நிகழ்ச்சியும், இரவு அத்தாழ பூஜைக்கு பின், ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. 12ம் தேதி இரவு சரங்குத்தியில், பள்ளி வேட்டையும், 13ல், பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.