பதிவு செய்த நாள்
08
ஏப்
2014
01:04
சிவகாசி : சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை தொடர்ந்து, பக்தர்கள், அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோயில், பங்குனி பொங்கல் திருவிழா, கொடியேற்றத்துடன் துவக்கி, 11 நாட்கள் திருவிழாவும் நடந்து வருகிறது. தினமும் அம்மன், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, அருள் பாலிக்கிறார். எட்டாள் நாள் விழாவில், பக்தர்கள், கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். அம்மனுக்கு, நேர்த்தி கடனாக, அக்னிசட்டி எடுத்தும், கயர் குத்து, முடி காணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை, முளைப்பாரி எடுத்து வழிபடுகின்றனர். அம்மன், குதிரை வாகனத்தில், முப்பிடாரியம்மன் கோயில் அருகே வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி, அம்மன் வீதி உலா வரும், தேர் திருவிழா நடைபெற உள்ளது.