சென்னை: தமிழகத்தில் இருந்து மகாராஷ்டிராவின் ஷீரடி, உத்தர பிரதேசத்தின் காசி உள்ளிட்ட இடங்களுக்கு, ஏசி வசதியுடன் சிறப்பு ரயில் சுற்றுப் பயணத்திற்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே துறையின் ஒரு அங்கமான அந்நிறுவனத்தின் தென் மண்டல உதவி பொது மேலாளர் ரவீந்திரன் கூறுகையில், இதில், பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்யப்படும். சுற்றுலா செல்ல விரும்புவோர், 044 - 6459 4959, 99629 44015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.