Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுமாட்டை வணங்குவது ஏன்? இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு! இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு!
முதல் பக்கம் » துளிகள்
பக்தருக்காக.. சிவபெருமான் எழுதிய சிபாரிசு கடிதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
03:04

ஒருவர் தன் மனத்தில் இருப்பதை அடுத்தவர்களுக்குத் தெரிவிப்பது, கடிதம் மூலமாகத்தான். அந்தக் கடிதத்தை, பாட்டாகவே எழுதி அனுப்பினால் எப்படியிருக்கும்? அதையும் சிவபெருமான் தன் பக்தருக்காக எழுதினார் என்றால் ... ஆம் தன் பக்தர் பாணபத்திரனுக்காக சேரமான் பெருமாளுக்கு எழுதிய கடிதம் இதோ...

1. மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை
அன்னம் பயில் பொழகங் ஆலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிதருமாற்றம்

2. பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளி திகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க!

3. பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே

மூன்று பகுதிகள். முதல் பாடல்-அனுப்புநர்; யார்? சிவபெருமான். இரண்டாம் பகுதி- பெறுநர்; அதாவது, சேரமான் பெருமாள்; மூன்றாம் பகுதி- தகவல்; என என்ன தகவல்? பாணபத்திரனுக்குச் செல்வம் கொடுப்பது பற்றி!

முதல் பாடலில், சிவபெருமான், திருவாலவாய் மதுரை எனத் தெளிவான விலாசம் உள்ளது. 2-வது பாடலில், மழை மேகம் போல வாரிக் கொடுப்பவன், பாவலர்களுக்கு மிகுந்த உரிமையுடன் வேண்டியதை, எல்லையில்லாமல் கொடுப்பவன், இந்த இரண்டுக்கும் மேலாக பதவியில் இருக்கும் (அதுவல்லவோ முக்கியம்?) அரசன் சேரமான் எனத் தெரிவிக்கிறது.

இந்தக்காலத்தில், பலருடைய சிபாரிசுக் கடிதங்கள் பலனில்லாமல் போவதற்கான காரணம் இந்தப் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நற்குணம் கொண்டவர்களிடம் மட்டுமே சிபாரிசுக் கடிதம் எடுபடும். அது மட்டுமல்ல; நல்லவர்களை ஆதரிப்பது. அரசனின், ஆட்சியாளனின் கடமை என்ற குறிப்பும் இந்தக் கடிதத்தில் அடங்கியுள்ளது.

மூன்றாவது பாடலில், கடிதத்தைக் கொண்டு செல்பவருடைய தகுதி என்ன, தேவை என்ன என்று சொல்லி, அவரது தேவையை நிறைவேற்றி மதுரைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது. மதுரையில் எழுந்தருளியிருக்கும் திரு.ஆலவாய் இறைவன் முன்னால் நின்று, தூய்மையான அன்போடு, தினந்தோறும் பாடல்கள் பாடி, வழிபாடு செய்து வந்தார் பாணபுத்திரர். அவர் கனவில் திரு. ஆலவாய் அண்ணல் தோன்றி, பாணபுத்திரா! சேரமான் பெருமாளுக்கு யாம் தரும் ஓலையைக் கொண்டு போய்க் கொடுத்து, பெரும் பொருளைப் பரிசாகப் பெற்றுக் கொள்! என்றார். பாணபுத்திரர் விழித்தெழ, அருகில் ஓலை இருந்தது. அதைக் கொண்டுபோய், சேரமான் பெருமாளிடம் கொடுத்தார். அந்த ஓலையில் இருந்த பாடலே இது.

இனி, பாடலின் ஜீவநாடியான பகுதியைப் பார்ப்போம்.

சேரமன்னா! இந்தக் கடிதம் கொண்டுவரும் பாணபத்திரன் பண்பாளன். உன்னைப் போல், அவனும் எம் பக்தன். உன்னைப் பார்ப்பதற்காக அவனை அனுப்பி இருக்கிறேன். அந்தப் பாணபத்திரனுக்கு நிறையப் பொருள் கொடுத்து, மறுபடியும் அவனை மதுரைக்கு என்னிடமே திருப்பி அனுப்பிவிடு! என்கிறார் சிவனார். பாணபத்திரரை மறுபடியும் மதுரைக்கே திருப்பி அனுப்புமாறு சிவபெருமான் ஏன் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்? சேரமான் பெருமாளும் தலைசிறந்த சிவபக்தர். நாயன்மார் வரிசையில் இடம் பெற்றவர். அப்பேர்ப்பட்ட உத்தம பக்தரான சேரமான் பெருமாள், இன்னிசை மீட்டி இசையால் வழிபாடு செய்யும் பாணபத்திரரைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு விட்டால்... என்ன செய்வது? மதுரையில் பாணபத்திரர் செய்யும் இசைத் தொண்டு தடைப்பட்டு விடுமல்லவா? அதனால்தான் அவரை மறுபடியும் மதுரைக்கே திருப்பி அனுப்பும்படி உத்தரவு இட்டார் திரு ஆலவாய் அண்ணல்.

யார் யாருக்கு கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்ன கொடுக்க வேண்டும்? யார் மூலம் கொடுக்க வேண்டும்? எல்லாம் இறைவனுக்குத் தெரியும்.

 
மேலும் துளிகள் »
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar