புதுச்சேரி: ஓங்கார ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ள ஓங்காரநந்தா சுவாமிக்கு, கும்பாபிஷேக விழா நடந்தது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதியில் ஓங்கார ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு ஓங்காரநந்தா சுவாமிகளின் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது. ஓங்காரநந்தா சுவாமி சிலைக்கு கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஓங்கார ஆசிரமத்தைச் சேர்ந்த ராஜசேகர், அருண்குமார், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.