சிவகங்கை :சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகர், அழகு செந்தரஅம்மன் கோயிலில் நாளை மகாசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இரவு 7.30 மணிக்கு 64 பைரவர் பூஜையும், சுவாமி கும்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.இரவு 9 மணிக்கு சரஸ்வதிராமநாதனின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7.30 மணிக்கு முதல் கால பூஜையும் மகாபூர்ணாகுதியும் தொடங்குகிறது.