பதிவு செய்த நாள்
05
மே
2014
01:05
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேவசப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சென்னகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு நேற்று எழுந்தருளினார். தொடர்ந்து, சுவாமிகள் ரத வீதிகளைச் சுற்றி வாகன மண்டபத்துக்கு வந்தன. இரவு அன்னப் பறவை வாகனத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.