பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
சிவகாசி : சிவகாசி சிவன் கோயிலில் நடைபாதையில் நடக்கும் அன்னதானத்தால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சிவகாசியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விஸ்வநாத சாமி விசாலாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, அரசின் உத்தரவுப்படி, தினமும் மதியம் நடக்கும் அன்னதானத்தில், 100 பக்தர்கள் பயன்பெறுகின்றனர். கோயில் நுழைவு வாயில் நடைபாதையில் வைத்து அன்னதானம் செய்கின்றனர். ரோட்டில் நடந்து செல்வபர்கள், அன்னதான திட்டத்தை வேடிக்கை பார்த்து செல்வதால், திட்டத்தில் சாப்பிடுபவர்களுக்கும், பக்தர்களுக்கு நெருடலாக உள்ளது. நடைபாதையில் உள்ள கடைகள் முன்பு டேபிள், பெஞ்ச் அமைப்பதால், கடைக்காரர்களும் அன்னதானத்திற்காக விரைவாக கடைகளை ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது. அன்னதானத்தை, கோயில் நிர்வாகம் வாடகை விட்டுள்ள கடைகளை காலி செய்து, அங்கு அன்னதானம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோருகின்றனர்.