பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
ராசிபுரம்: ராசிபுரம் பொன் வருதராஜ பெருமாள் கோவிலில், வரும், 14ம் தேதி, திருத்தேர் விழா நடக்கிறது. ராசிபுரம் பொன் வருதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து, நேற்று மாலை, 6 மணிக்கு ஹனுமந்த வாகன ஸ்வாமி உலா, இன்று, (7ம் தேதி) மாலை, 6 மணிக்கு, ஸ்வாமி அன்ன வாகன உலா, 8ம் தேதி, மாலை, 6 மணிக்கு சிம்ம வாகன உலா, 9ம் தேதி, மாலை, 6 மணிக்கு, கஜலட்சுமி வாகன உலா, 10ம் தேதி, மாலை, 6 மணிக்கு யானை வாகன உலா நடக்கிறது. தொடர்ந்து, 11ம் தேதி மாலை, 6 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி, பொன் வருதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் மற்றும் புஷ்ப விமான திருவீதி உலா நடக்கிறது. 13ம் தேதி, ஸ்வாமி குதிரை வாகன உலா, 14ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு திருமஞ்சணம், உற்சவ மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தளுகின்றனர். மாலை, 4 மணிக்கு திருத்தேர் இழுக்கப்படுகிறது. 15ம் தேதி மாலை, 6 மணிக்கு தேர்நிலை சேருதல், 16ம் தேதி காலை, 8 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், துவஜாரோகனம், இரவு, 7 மணிக்கு சத்தாபரணம், 17ம் தேதி, இரவு, 7 மணிக்கு வசந்தோற்சவம் நடக்கிறது. விழா, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.