கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2014 02:05
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. நேற்று முன்தினம் திருத்தேர் முகர்த்தம் செய்து வைக்கப்பட்டது. நேற்று காலை 6.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நேற்று முதல் வரும் 13 வரை பகலிலும், இரவிலும் வீதியுலா உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி, 12ம் தேதி திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கில் பெருமாள் தாயார் வீதியுலா உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 4ம் தேதி பெருமாளுக்கு தேர் வடம் பிடிக்கப் படுகிறது.