உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியம் தேவியானந்தல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பூவாத்தமன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 3ம் தேதி முதல்கால யாக சாலை பூஜை, 4ம் தேதி 2ம் கால யாக சாலை பூஜை, 5ம் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சிறப்பு யாகம் செய்யப்பட்டு பூவாத்தமன் சுவாமி கோவிலிலுள்ள கோபுர கலசத்திற்கு குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.