பெரம்பலூர் மாரியம்மனுக்கு அலகு குத்தி நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2014 02:05
பெரம்பலூர்: பெரம்பலூர் எடத்தெருவிலுள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியுள்ளது. இதன்படி அன்னம், ரிஷபம், பூபல்லாக்கு, குதிரை போன்ற வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவிதி உலாவந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்து வருகிறார். இதில் 4ம் தேதி மாவிளக்கு பூஜை நடந்தது. 5ம் தேதி அக்னிச்சட்டிஏந்துதல், அலகு குத்துதல் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அக்னிசட்டிகளை ஏந்திச்சென்றனர். பலர் முகத்திலும், உடலிலும் அலகு குத்திக்கொண்டனர். பின்னர் இவர்கள் கோயிலில் இருந்து புறப்பட்டு கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்டு, பெரியார் சிலை, பூசாரித்தெரு வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6 மணியளவில் திருத்தேரோட்டம் நடந்தது. நேற்று காலை அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.