சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம் எஸ்.குளத்தூர் கிராமத்தில் ராமர் சீதா கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராம ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திவ்ய நாம பஜனை, ரங்கநாத சர்மா, வெங்கடேச பாகவதர், குப்புராஜ் பாகவதர் குழுவினரால் சீதாகல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.தீபாராதனைக்கு பின் ராமர் சந்தர்ப்பனை நடந்தது.