குடியாத்தம் : குடியாத்தத்தை அடுத்த உள்ளி ஊராட்சி, கம்மவாரம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள கால பைரவர், பைரவி அம்மன், மஹாகாளியம்மன் கோவில் 14 ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழா 7-ம் தேதி நடைபெற்றது.இதையொட்டி காலை காலபைரவர், பைரவி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகமும், தொடர்ந்து சுவாமிகள் திருவீதி உலா,கூழ்வார்த்தல், பொங்கலிடுதல், தீச்சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.