பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனித்தனியாக தேரில் வலம் வர, விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானையுடன் முன் செல்ல தேரோட்டம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கிளம்பிய தேர், பஜார், முத்தாலம்மன் கோயில் வழியாக மதியம் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது. ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்மன், சந்திரசேகரசுவாமி பிரியாவிடையுடன், ரதவீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள் "ஹர ஹர, சிவ சிவ கோஷத்துடன் தேரை, வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 10.30 மணிக்கு புறப்பட்ட தேர், ரதவீதிகளின் வழியாக மதியம் 2.30 மணிக்கு நிலையை அடைந்தது. இரவு சுவாமி - அம்மன் ரிஷப வாகனத்தில் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில், சித்திரை திருவிழா மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் தேதி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. வல்மீகநாதர், பாகம்பிரியாள் தாயாருடன் எழுந்திருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 10 மணிக்கு தேர், கோயில் வாசல் முன்பு நிறுத்தபட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு துவங்கி 5 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.