பதிவு செய்த நாள்
14
மே
2014
01:05
உளுந்தை : உளுந்தை வெங்கடேச சுவாமி கோவிலில், ஆறாம் ஆண்டு சித்ரா பவுர்ணமி கருட சேவையும், ஸ்ரீவாரி கல்யாண உற்சவமும் இன்று நடக்கிறது. கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு கிராமம் அடுத்துள்ளது உளுந்தை ஊராட்சி. இங்குள்ள வெங்கடேச சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கருட சேவையும், ஸ்ரீவாரி கல்யாண உற்சவமும் நடந்து வருகிறது.அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கருட சேவையும், ஸ்ரீவாரி கல்யாண உற்சவமும் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 5:00 மணிக்கு, நித்திய பூஜையுடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு கருட சேவையும், காலை 9.00 மணிக்கு திருவேந்தி காப்பு, தீர்த்த பிரசாத வினியோகமும், காலை 9:30 மணிக்கு மகா சாந்தி ஹோமமும், நண்பகல் 11:00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனமும், மதியம் 1:00 மணிக்கு விசேஷ ஆராதனையும் நடைபெறும்.அதன்பின், மாலை 4:00 மணி முதல், 6:30 மணி வரை ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாரி திருவீதி உலாவும் நடைபெறும்.