பழநி : சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பழநி லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில், தேரோட்டம் நடந்தது. பழநி லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, மே 5 ல் துவங்கி இன்றுடன் நிறைவடைகிறது. நாள்தோறும் லட்சுமிநாராயணப் பெருமாள், சிம்மம், அனுமான், சேஷ வாகனங்களில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், ஏழாம் நாள் மே 11 ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் திருத்தேரேற்றம் செய்யப்பட்டது. லட்சுமிநாராயணப்பெருமாளுக்கு, சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து, நான்குரத வீதிகளில் தேர்வடம்பிடித்து, சித்திரை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.