பதிவு செய்த நாள்
15
மே
2014
03:05
உடம்பு, உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். இந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த அத்தியாயம் ஆராய்கிறது.
உயிரும் ஆன்மாவும்:
ஓம் கோஸயமாத்மேதி வயமுபாஸ்மஹே? கதர: ஸ ஆத்மா யேன வா பச்யதி யேன வா ச்ருணோதி யேன வா கந்தானாஜிக்ரதி யேன வா வாசம் வ்யாகரோதி யேன வா ஸ்வாது சாஸ்வாது ச விஜானாதி (1)
அயம்- இந்த; ஆத்மா- ஆன்மா; இதி- என்று; வயம- நாம்; க:- யாரை; உபாஸ்மஹே- தியானிக்கிறோம்; ஸ: ஆத்மா- அந்த ஆன்மா; கதர:- இருவரில் யார்; யேன வா- யாரால்; பச்யதி-பார்க்கிறோம்; ச்ருணோதி- கேட்கிறோம்; கந்தான்- மணங்களை; ஆஜிக்ரதி- முகர்கிறோம்; வாசம்- பேச்சை; வ்யாகரோதி- பேசுகிறோம்; ஸ்வாது- இனிப்பு; ஆஸ்வாது- கசப்பு; விஜானாதி- பகுத்தறிகிறோம்.
1. இந்த ஆன்மா என்று நாம் யாரைத் தியானிக்கிறோம்? இருவரில் யார் ஆன்மா? யாõரல் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, பேசுகிறோமோ, இனிப்பு- கசப்பு என்று பகுத்தறிகிறோமோ அவரே ஆன்மா.
உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகின்றன. ஆனால் கதிரவன் எதிலும் நேரடியாக ஈடுபடுவது இல்லை. அவனது முன்னிலையில் அனைத்தும் நடைபெறுகின்றன. ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க, உயிர் உலகின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.
முண்டக உபநிஷதம் ஓர் உவமையின் மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது: ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்ந்துவந்தன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்பதும் அதன் காரணாமன இன்பதுன்பங்களை மாறிமாறி அனுபவிப்பதுமாக இருக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது. இங்கே, அனுபவிக்கின்ற பறவை ஜீவனையும் மற்ற பறவை ஆன்மாவையும் குறித்து நிற்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் தமது கையில் அடிப்பட்டபோது கூறினார்: இதனுள் (தம் உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை.... இன்னொருவர் பக்தனாக
1. த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்ஸ்வஜாதே
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி
அனச்னன் அன்யோ அபிசாகசீதி - முண்டக உபநிஷதம், 3.1.1.
ஆகியுள்ளான். பக்தனுக்குத்தான் கை உடைந்தது. இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான், புரிகிறதா? கை உடைவது போன்ற சுகதுக்க அனுபவங்கள் உயிருக்கே என்பது இங்கே உணர்த்தப்படுகிறது.
பார்ப்பது, கேட்பது போன்ற அனுபவங்கள் உயிருக்கு. ஆனால் பார்ப்பது, கேட்பது போன்ற அனுபவங்களுக்கு ஆதாரமாக இருப்பது ஆன்மா. அனைத்திற்கும் சாட்சியாக விளங்குகின்ற அதையே நாம் தியானிக்க வேண்டும் என்று இந்த மந்திரம் தெரிவிக்கிறது.
ஆன்மாவே ஆதாரம்:
யதேதத் ஹ்ருதயம் மனச்சைதத் ஸம்ஜ்ஞானமாஜ்ஞானம் விஜ்ஞானம் ப்ரஜ்ஞானம் மேதா த்ருஷ்ட்டிர் த்ருதிர்மதிர் மனீஷா ஜூதி: ஸ்ம்ருதி: ஸங்கல்ப: க்ரதுரஸு: காமோ வச இதி ஸர்வாணி ஏவைதானி ப்ரஜ்ஞானஸ்ய நாமதேயானி பவந்தி (2)
யத் ஏதத்- அந்த இது; ஹ்ருதயம்- புத்தி; மன:- மனம்; ஸம்ஜ்ஞானம்- உணர்வு; ஆஜ்ஞானம்- ஆளும் தன்மை; விஜ்ஞானம்- உலக அறிவு; ப்ரஜ்ஞானம்- பகுத்தறிவு; மேதா- அறிவுக்கூர்மை; த்ருஷ்ட்டி:- உள்ளுணர்வு; த்ருதி:- மனோதிடம்; மதி:- சிந்தனையாற்றல்; மனீஷா- மனத்தெளிவு; ஜூதி:- மனக்கலக்கம்; ஸ்ம்ருதி:- நினைவு; ஸங்கல்ப:- நிச்சய புத்தி; க்ரது:- தீர்மானம்; அஸு:- பிராண சக்தி; காமம்- ஆசை; வச:- இன்ப நாட்டம்; இதி- என்று; ஏதானி- இவை; ஸர்வாணி- அனைத்தும்; ப்ரஜ்ஞானஸ்ய- ஆன்மாவின்; நாமதேயானி- பல பெயர்கள்; பவந்தி- ஆகின்றன.
1. அமுத மொழிகள், 3.478.
2. அந்த ஆன்மாவே புத்தியாகவும் மனமாகவும் ஆகியிருக்கிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, உள்ளுணர்வு, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, நிச்சய புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நாட்டம் என்பவை ஆன்மாவின் பல பெயர்கள் ஆகும்.
பேருணர்வுப் பொருளான ஆன்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும் அனைத்துமாக விளங்குவதும் அதுவே. உடம்பின் இயக்கங்களாக, மனத்தின் இயக்கங்களாக அந்த ஆன்மாவே திகழ்கிறது.
ஆன்மாவே இறைவன்:
ஏஷ ப்ரஹ்மைஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தேவா இமானி ச பஞ்சமஹாபூதானி ப்ருதிவீ வாயுராகாச ஆபோ ஜ்யோதீம்ஷீத்யேதானி இமானி ச க்ஷúத்ர மிச்ராணீவ பீஜானி இதராணி சேதராணி சாண்டஜானி ச ஸ்வேதாஜானி சோத்பிஜ்ஜானி சாச்வா காவ: புருஷா ஹஸ்தினோ யத்கிஞ்சேதம் ப்ராணி ஜங்கமம் ச பதத்ரி ச யச்ச ஸ்தாவரம் ஸர்வம் தத் ப்ரஜ்ஞாநேத்ரம் ப்ரஜ்ஞானே ப்ரதிஷ்ட்டிதம் ப்ரஜ்ஞாநேத்ரோ லோக: ப்ரஜ்ஞாப்ரதிஷ்ட்டாப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம (3)
ஏஷ:- இதுவே; ப்ரஹ்மா - படைப்புக் கடவுள்; இந்த்ர:- இந்திரன்; ப்ரஜாபதி:- படைப்பின் தலைவர்; ஸர்வே- எல்லா; தேவா:- தேவர்கள்; இமானி- இந்த; பஞ்சமஹாபூதானி- ஐந்து அடிப்படை மூலங்கள்; ப்ருதிவீ- பூமி; வாயு:- காற்று; ஆகாச:- வெளி; ஆப:- தண்ணீர்; ஜ்யோதீம்ஷி-நெருப்பு; இதி- இவ்வாறு; ஏதானி- இந்த; இமானி- இந்த; க்ஷúத்ர மிச்ராணி- சிறிய உயிரினங்கள்; இவ-போல்; பீஜானி- விதைகள்; இதராணி- மற்றவை; அண்டஜானி- முட்டையில் தோன்றுபவை; ஸ்வேதஜானி- வியர்வையில் தோன்றுபவை; உத்பிஜ்ஜானி- விதையிலிருந்து முளைப்பவை; அச்வா:- குதிரைகள்; காவ:- பசுக்கள்; புருஷா:- மனிதர்கள்; ஹஸ்தின:- யானைகள்; இதம்- இந்த; யத் கிச் ச- இருப்பவை அனைத்தும்; ப்ராணி- உயிரினங்கள்; ஜங்கமம்- நடப்பவை; பதத்ரி- பறப்பவை; யத் ச- எவை; ஸ்தாவரம்- அசையாதவை; தத்- அது; ஸர்வம்- அனைத்தும்; ப்ரஜ்ஞா நேத்ரம்- ஆன்மாவால் வழி நடத்தப்படுபவை; ப்ரஜ்ஞானே- ஆன்மாவில்; ப்ரதிஷ்ட்டிதம்- நிலை பெற்றவை; லோக:- உலகம்; ப்ரஜ்ஞா நேத்ர:- ஆன்மாவால் வழிநடத்தப்படுகிறது; ப்ரஜ்ஞா- ஆன்மா; ப்ரதிஷட்டா- ஆதாரம்; ப்ரஜ்ஞானம்- பேருணர்வுப்பொருளான ஆன்மாவே; ப்ரஹ்ம- இறைவன்.
3. பேருணர்வுப்பொருளான ஆன்மாவே படைப்புக் கடவுளாகவும், இந்திரனாகவும், படைப்பின் தலைவராகவும், மற்ற தேவர்களாகவும் உள்ளது. பூமி, காற்று, வெளி, தண்ணீர், நெருப்பு ஆகிய ஐந்து அடிப்படை மூலங்களாக இருப்பது அதுவே. சிறிய உயிரினங்களாகவும் விதைகளாகவும் அதுவே இருக்கிறது. முட்டையில் தோன்றுபவை, கருப்பையில் தோன்றுபவை, வியர்வையில் தோன்றுபவை, விதையிலிருந்து முளைப்பவை அனைத்தும் அதுவே. குதிரைகள், பசுக்கள், மனிதர்கள், யானைகள் என்று இருப்பவை அனைத்தும் அதுவே. நடப்பவை, பறப்பவை என்று அனைத்து உயிரினங்களும் அசையாத பொருட்களும் ஆன்மாவே. அனைத்தும் ஆன்மாவால் வழிநடத்தப்படுகின்றன; ஆன்மாவில் நிலைபெற்றுள்ளன. உலகமே ஆன்மாவால் வழி நடத்தப்படுகிறது. ஆன்மாவே அனைத்திற்கும் ஆதாரம். பேருணர்வுப்பொருளான அந்த ஆன்மாவே இறைவன்.
2 தனிநபர் நிலையில் ஆன்மா அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறியது. அதாவது உடல்- உயிர் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது ஆன்மா என்று அங்கே கண்டோம். பிரபஞ்ச நிலையில், பேருணர்வுப் பொருளான அந்த ஆன்மாவே இறைவனாக அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதை இந்த மந்திரம் கூறுகிறது. உயிரினங்கள், கல், மண் போன்ற அசையாப் பொருட்கள் என்று பிரபஞ்சமாக விளங்குவது ஆன்மாவே. தனிநபர் நிலையில் ஆன்மாவாக மனிதனுள் உறைகின்ற அதே பொருள்தான் பிரபஞ்ச நிலையில் இறைவனாக, எங்கும் நிறைந்தவராக, அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளார்.
ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம என்ற மகாவாக்கியத்தை இந்த மந்திரத்தில் காண்கிறோம்.
மரணமிலா நிலை:
பேருணர்வுப்பொருளான ஆன்மாவே இறைவன் என்பதை அனுபூதியில் உணர்பவன் என்ன பெறுகிறான் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.
1. நான்கு வேதங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சொற்றொடர்கள் மகா வாக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்ற இவை நமக்கும் இறைவனுக்கும் உள்ள அறுதிநிலைத் தொடர்பை விளக்குபவையாக உள்ளன:
1. ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம (பிரம்மம் பேருணர்வுப் பொருள்) -ரிக்வேதம்
2. அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்மாவாக இருக்கிறேன்) -யஜுர்வேதம்
3. தத் த்வம் அஸி (அது நீயாக இருக்கிறாய்) -சாமவேதம்
4. அயமாத்மா ப்ரஹ்ம (இந்த ஆன்மா பிரம்மம்) -அதர்வண வேதம்
ஸ ஏதேன ப்ரஜ்ஞேனாத்மா ஸஸ்மால்லோகாத் உத்க்ரம்ய அமுஷ்மின் ஸ்வர்கே லோகே ஸர்வான் காமானாப்த்வா அம்ருத: ஸமபவத் ஸமபவத் (4)
ஏதேன- இந்த; ப்ரஜ்ஞேன- பேருணர்வுப்பொருளான ஆத்மனா- ஆன்மாவால்; ஸ:- அவன்; அஸ்மாத்- இந்த; லோகாத்- உடம்பிலிருந்து; உத்க்ரம்ய- வெளியேறி; அமுஷ்மின்- அந்த; ஸ்வர்கே லோகே- சொர்க்கத்தில்; ஸர்வான்- எல்லா; காமான்- ஆசைகளும்; ஆப்த்வா- நிறைவேறப் பெற்று; அம்ருத:- மரணமிலா நிலையை; ஸமபவத்- அடைகிறான்.
4. பேருணர்வுப்பொருளான ஆன்மாவை உணர்பவன் (உடம்பு வீழ்ந்தும்) வெளியேறி சொர்க்கலோகத்திற்குச் செல்கிறான். அங்கே எல்லா ஆசைகளும் நிறைவேறப் பெற்று, மரணமிலா நிலையை அடைகிறான்; மரணமிலா நிலையை அடைகிறான்.
ஆன்மாவை உணர்பவன் மரணமிலா நிலையை அடைகிறான். இவ்வாறு ஆன்மாவை உணர்கின்ற யாரும் மரணமிலா நிலையை அடையலாம் என்பதை உணர்த்தி உபநிஷதம் நிறைவுபெறுகிறது.
இதி ஐதரேயோபநிஷதி த்ருதீயோத்யாய:
ஓம் வாங்மே மனஸி ப்ரதிஷ்ட்டிதா மனோ மே வாசி ப்ரதிஷ்ட்டிதம் ஆவிராவீர்ம ஏதி வேதஸ்ய ம ஆணீஸ்த: ச்ருதம் மே மா ப்ரஹாஸீ: அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது அவது மாமவது வக்தாரமவது வக்தாரம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இதி ஐதரேயோபநிஷதி சதுர்தோத்யாய:
நன்றி: ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை