பெண்ணாடம்: பெண்ணாடத்தில் புதிதாக கட்டிய ராமர் பாதம் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவடைந்தது. பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டிய ராமர் பாதம் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து தினமும் நடந்த மண்டலாபிஷேகத்தில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மண்டலாபிஷேக நிறைவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு ஹோமம், 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ராமர் பாதத்திற்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி, 7:00 மணிக்கு கடம் புறப்பாடு, மகா தீபாராதனை, 7:10 மணிக்கு கலசாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.