சூரக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2014 12:06
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த பூஜையை முன்னிட்டு கடந்த 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.