விழுப்புரம் நாகமுத்து மாரியம்மன் உற்சவ நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2014 12:06
விழுப்புரம்: விழுப்புரம் நாவலர் நெடுந்தெரு, நாகமுத்து மாரியம்மன் கோவில் உற்சவ நிறைவு விழா நடந்தது. விழுப்புரம் நாவலர் நெடுந்தெருவில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் உற்சவம் 30ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை அபிஷேக ஆராதனை செய்து, எருமணந்தல் ஏரியிலிருந்து கரகம் ஜோடித்து கொண்டு வரப்பட்டது. மதியம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் அம்மன் வீதியுலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர். இரவு மேடை நாடகம் நடந்தது.