பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
சென்னை : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, 10.45 கோடி ரூபாய் செலவில், கோவில் திருப்பணி வரும், 5ம் தேதி துவங்குகிறது.திருச்சி ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. ஏழு பிரகாரங்களை உள்ளடக்கி, 21 கோபுரங்களுடன், 156 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2001ல் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்துள்ளதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், 10.45 கோடி ரூபாயில் திருப்பணி செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பணி, வரும், 5ம் தேதி காலை, 7:30 மணி முதல், 8:30 மணிக்குள், ஆயிரங்கால் மண்டபத்தில், ஸ்ரீமகா சுதர்சன ஹோமத்துடன் துவங்குகிறது. பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று, ரங்கநாதரின் அருள் பெறலாம், என, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் தெரிவித்துள்ளார்.