காஞ்சிபுரம், குமரகோட்டம் கோவில் பிரம்மோற்சவத்தின், மூன்றாம் நாளான நேற்று, மலர் அலங்காரத்தில், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் அருள்பாலித்தார். வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின், இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, சந்திர பிரபை வாகனத்தில், சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.