மேலூர்: மேலூரில் மாங்கொட்டை திருவிழாவை முன்னிட்டு திருவாதவூரில் இருந்து திருமறைநாதர் மேலூருக்கு எழுந்தருளினார். மேலூரில் நடைபெறும் மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரில் இருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளினார். விழாவை தாசில்தார் உருவாக்கிய காரணத்திற்காக, கௌரவிக்கும் பொருட்டு, மேலூர் நுழைவாயிலில் நாவினிப்பட்டி கிராமத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தாசில்தார் மண்டகப்படியில், தாசில்தார் குமாருக்கு, முதல் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செக்கடி, பேங்க்ரோடு, மெயின்ரோடு உள்பட 32 மண்டபகங்களில் தங்கி அருள்பாலித்தார். அங்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேலூர் இந்து வர்த்தக சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜூன் 9ல் திருக்கல்யாணமும், ஜூன் 10ல் தேரோட்டமும் நடைபெறும்.