திருப்போரூர் : திருநிலை எட்டியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. மானாம்பதி அடுத்த, திருநிலை ஊராட்சியில், சீனுவாசபுரம் கிராமம் உள்ளது. இங்கு பழமையான கோவிலாக எட்டியம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த இக்கோவில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக கும்பாபிஷேகத்தை ஒட்டி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள் நடந்தன.