விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும்.
விரதநாளில் ஒருவேளை சாப்பாடு சாப்பிடுவதே சரி. உடலும், உள்ளமும்கடவுளையே சிந்திக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். சிலர் உடல்நிலையைப் பொறுத்து, காலை, இரவில் கொஞ்சம் பால், பழம் சாப்பிட்டுக் கொள்வது உண்டு. விரதநாளில் ‘பல்ஆகார்’(பழ உணவு) சாப்பிடலாம் என்றிருந்த வழக்கமே, நாளடைவில் ‘பலகாரம்’(இட்லி, தோசை) என திரிந்து விட்டது.