Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: ... உடுமலை கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு யாகம்! உடுமலை கோவிலில் போலீஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கும்பாபிஷேக மலர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2014
11:06

வடிவு (அழகு) ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆயிற்று என்றும், வடிவு ஈஸ்வரி புரம் வடிவீஸ்வரம் ஆயிற்று என்றும் கூறுவர். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் சுந்தரேஸ்வரர், அவருக்கேற்றாற்போல், தேவியும் அழகேஸ்வரி என பெயர் பெற்று உள்ளனர். இவ்வட்டார மக்கள் இவளை அழகம்மன் என்று அழைக்கின்றனர். மதுரையை போன்றே தேவிக்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு ஊரே தேவியின் பெயராயிற்று.வடிவீஸ்வரம் கோயிலில் மூலவர் சுந்தரேஸ்வரர். அவரை சம்பந்தப் பெருமான் இனிய தமிழில் அழகன் என்று பாடுகின்றார், மூலவருக்கு ஏற்றார்போல தேவியும் அழகேஸ்வரியாக நின்று அருள்புரிகிறாள். மூலவர் சிவனாக இருந்தாலும் இக்கோயில் அழகம்மன்கோயில் என்றுதான் அழைக்கப்படுகின்றது. மதுரையில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் போல வடிவீஸ்வரத்தில் அழகம்மனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அவளது பெயரையே கோயிலுக்கு சூட்டிஉள்ளனர்.வடிவீஸ்வரத்தின் விளக்கம்:வடிவீஸ்வரத்தை திருஞான சம்பந்தர் தென்னார் தேவீஸ்வரம் என்று புகழ்ந்து பாடுகிறார். நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரியை அடுத்து ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலம் ஒன்று உண்டு. தேவீஸ்வரர் என்பது அங்குள்ள ஈசன் திருநாமமாக இன்றும் வழங்கப்படுகிறது. அழகிய நாயகி என்று பெயர் பெற்றுள்ள வடிவுடைய அம்மையின் பெருமையால் முன்னாளில் தேவிசுரம் என்று அழைக்கப்பட்ட திருக்கோயில், பின்னாளில் வடிவீஸ்வரம் என்று விளங்குகிறது. நாளடைவில் கோயில் பெயர் ஊர் பெயர் ஆயிற்று. வடிவீஸ்வரம் சிவன் கோயில் மூலவரை கோட்டார் வடிவீஸ்வரம் உடைய நயினார் என்றும், தேவியை அழகிய மங்கை நாச்சியார் என்றும் இக்கோயில் கல்வெட்டுகள் கூறுகிறது.சம்பந்தர் பாடிய தலம்:திருஞானசம்பந்தரால் பாடிப்புகழப்பட்ட கோயில்கள் நாகர்கோவிலில் அமைந்துள்ள வடசேரி சோழராஜா கோயிலும், வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலும் எனஅறிய முடிகிறது. வடிவீஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரேஸ்வரரை "குலைமல்கு தண் பொழில் சூழ்ந்தழகார் திருக் கோட்டாற்றுள் அலை மல்கு வார்சடை யேற்றுகந்த அழகன்எனவும், "தெண்டிரை நீர் வயல் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள் அண்டமும் எண்டிசையாகி நின்ற அழகன்” எனவும் போற்றி புகழ்கிறார் சம்பந்தர் பெருமான். பண்டை காலத்தில் நாகர்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம் ஆகிய அனைத்து இடங்களும் கோட்டாறு என்று தான் அழைக்கப்பட்டு வந்தது.கோயில் அமைப்பு:கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயில் முன்பு ஒரு அழகிய குளம் உள்ளது. மூலவரின் முன்னால் நந்தியும், அவரை அடுத்து தெற்கு பிரகாரத்தில் ஒரு நீண்ட மண்டபத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட அப்பர், சந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேரமான், பெருமாள், மெய்கண்டர், சந்திரேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் இவர்களது திருவுருவங்களும் வைக்க பட்டுள்ளன. தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருக பெருமானும் எழுந்தருளியுள்ளனர். இவர்களிடையே உற்சவ மூர்த்தி, மகாவிஷ்ணு, நாகராஜா, காசி விஸ்வநாதர், நால்வரையும் ஒரே வரிசையில் வணங்கலாம். முதல் பிரகாரத்தில் சனிபகவான் தரிசனம் தருகிறார். மூலவரை நோக்கி சூரிய பகவானும், சந்திரபகவானும் காட்சி தருகின்றனர். இரண்டாவது பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர் காட்சி தந்து அருள்புரிகின்றார்.கல்வெட்டு தகவல்கள்:திருவிதாங்கூர் தொல்லியல் துறையினர் இங்கு கிடைத்த மூன்று கல்வெட்டுக்களை புதுப்பித்துள்ளனர். அவற்றில் பழமையானது கொல்லம் ஆண்டு 644 (கி.பி.1459)-ல் எழுதப்பட்டது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சியில், திருவேங்கடமுடையான் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் தாவளமிட்டிருந்த போது, நாஞ்சில் நாட்டின் மும்முடி சோழநல்லூர் என்ற கோட்டாற்றில், வடிவீஸ்வரம் உடைய நயினாருக்கும் அழகிய மங்கை நாச்சியாருக்கும் தினமும் பூஜை செலவுக்காக மகிழ்ச்சியுடன் முதல் தரமான 2 மா அளவுள்ள நிலத்தை தேவதானமாக அளித்தார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த கல்வெட்டில் வேறு எந்த குறிப்பும் காணப்படவில்லை. கிடைத்த குறிப்புகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தங்கி வந்த திருவிதாங்கூர் மன்னர் ஆதித்தவர் மன்னரைத்தான் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது என அறியலாம். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், கொல்லம் ஆண்டு 659-ல் (கி.பி.1484) எழுதப்பட்ட கல்வெட்டிலும், இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதே ஆதித்தவர்மனின் பெயரைத்தான் திருக்குறுங்குடி கோயில் மணியில் வஞ்சி நாட்டு தலைவன் என்று பொறித்துள்ளனர். இந்த கல்வெட்டு கி.பி.1469ல் தோன்றியதாக தெரிகிறது. திருநெல்வேலி தென்பகுதியை அடக்கி ஆண்ட இந்த ஆதித்தவர்மனை பற்றி, நாகம் ஐயாவின் திருவிதாங்கூர் சரித்திரத்திலும் குறிப்புகள் வருகின்றன. மற்ற இரண்டு கல்வெட்டுகளும், கோயிலுக்கு சிலர் அளித்த மானியங்கள் பற்றி தெரிவிக்கின்றன.ஆன்மிகப்பயிர் விளைக்கும் பூமி:வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில், மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசியில் நடக்கும் சூரசம்ஹார காட்சிகளும் சிறப்பானவை. இக்கோயில் அறநிலையத்துறையின் பாதுகாப்பில் இருந்தாலும், முக்கிய விழா செலவுகளை வெள்ளத்தாம்பாள கட்டளை என்ற அறநிலையக்குழு ஏற்றெடுத்து நடத்துகிறது. அழகம்மன் கோயிலைச் சுற்றிலும் பல கோயில்கள் அமைந்துள்ளன. வடிவீஸ்வரத்தில் மேற்கு ரத வீதியும், தெற்கு ரதவீதியும் இணையும் கன்னிமூலையில் விநாயகரும், அவரை அடுத்து சுடலைமாடன், சந்தனமாரியம்மன் கோயில் கொண்டுள்ளனர். தெற்கு ரதவீதியில் வடக்கு நோக்கி உச்சிமாகாளியம்மன் காட்சி தருகிறாள். தெற்கு ரதவீதியும், கிழக்கு ரதவீதியும் இணையும் அக்னி மூலையில் வடக்கு நோக்கு முத்தாரம்மன் கோயில் கொண்டுள்ளாள். கிழக்கு ரத வீதியில் தேரடியை அடுத்து விநாயகர் கோயில் காட்சி தருகிறது. மேற்கு ரதவீதியை அடுத்து சாஸ்தா கோயிலும், அதனை அடுத்துள்ள பள்ளத்தெருவில் லட்சுமி நாராயணர் கோயிலும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வடிவீஸ்வரம் மேற்கு ரதவீதியில் புகழ் பெற்ற இடர்தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இவ்வாறு, வடிவீஸ்வரம் பல்வேறு கோயில்களைக் கொண்டு ஆன்மிகப் பயிர் வளர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.தகவல் உதவி: டாக்டர் எஸ்.பத்மநாபன்கன்னியாகுமரி வரலாற்றுபண்பாட்டு ஆய்வுமையம்.தினமலர் சார்பில் கோபுரத் திருப்பணி:வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் திருப்பணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. கோயிலின் நான்கு வாசல்களிலும் கோபுரம் அமைக்க முடிவு செய்ய பக்தர்கள் விரும்பியதை தொடர்ந்து தேவபிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் கோபுரம் அமைக்கலாம் என்று முடிவு வந்ததை தொடர்ந்து, புதிய கோபுரத்துக்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டது. இதில் மூன்று நிலை தெற்கு கோபுரம், 25 லட்சம் ரூபாய் செலவில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக அவரது புதல்வர்கள் டாக்டர் ஆர்.வெங்கிடபதி, டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஆர்.ராகவன், ஆர்.சத்தியமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் சார்பில் கட்டப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar