மயிலம்: மயிலம் முருகன்கோவில் மண்டபத்தில்ஆதின முதற்குரவர் பாலசித்தருக்கு மகா குருபூஜைவிழா நேற்றுநடந்தது.காலை 7 மணிக்கு பாலசித்தர் குருமூர்த்திக்குசிறப்பு அபிஷேகம் நடந்தது. பாலசித்தர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாரதனை வழிபாடு நடந்தது.கோவில் மண்டபத்தில்நடந்த குரு பூஜை விழாவில் மயிலம் பொம்மபுரஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள்ஆசியுரைவழங்கினார்.நூல் வெளியீட்டுவிழாவிற்குவேலூர் கலவைசச்சிதானந்த சுவாமிகள்தலைமைதாங்கி தியகராஜகவிராயர் எழுதிய மயூராசல புராணம் என்ற நூலைவெளியீட்டு சிறப்புரையாற்றினர். மயிலம் திருமடம்விஸ்வநாதன் வரவேற்றார். தத்துவத்துறை பேராசிரியர் சென்னை ரத்தினசபாபதி, தியாகதுருகம் தமிழ்ச்சங்கத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் நூலின்முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.மயிலம்தமிழ்க்கல்லூரிபொறுப்பு முதல்வர் விஜயகாந்தி மமகிழ்வுரையாற்றினார்.