பதிவு செய்த நாள்
08
ஜூலை
2014
10:07
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், ஆனி திருவிழா கோர்ட் உத்தரவுப்படி 8 ஆண்டுக்கு பின், ஜூலை 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி தூக்குவதில் பிரச்னை எழுந்ததால், தேவஸ்தான ஊழியர்களே சுவாமி தூக்கி வருகின்றனர். கடந்த,3 நாட்கள் திருவிழாவில், மண்டகபடிதாரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், தேவஸ்தான நிர்வாகமே மண்டகப்படிகளை நடத்தினர். நான்காம் நாளில், இரவுசேரி நாடு, 5ம் நாளில் மேலசென்பொன்மாரி நாடு சார்பில் மண்டகப்படி பூஜைகள் நடந்தது. விழாவின், 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு, சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. குருக்கள் தாஸ் தலைமையில், சிவச்சாரியார்கள், வேதமந்திரம் முழங்க, சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.