சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம், இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்கு உரிய பாராயண நூலாகத் திகழ்கிறது. இதைப் பாடியவர் தேவராயசுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல். இதைப் பாடுவோரை கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டதால் ‘கந்த சஷ்டி கவசம்’ எனப் பெயர் பெற்றது. கி.பி., 1654ல் பிறந்த இந்நூலின் இன்றைய வயது 360. ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இந்த பாராயணம், பக்தர்களின் நோய், பயம் தீர்க்கும் மாமந்திர நூலாகும். இக்கவசத்தை மனப்பாடமாக நெஞ்சில் பதிய வைப்போருக்கு செல்வம் பெருகும்.