நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகமும், தீபாராதனையும் முடிந்து ஐயப்பனுக்கு சங்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. முருகன் குருக்கள் பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு ஐயப்பன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.