செஞ்சி: மகாதேவி மங்கலம் பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் பிடாரியம்மன் கோவில் திருத்தேர் உற்சவம் கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மறுநாள் கூழ் வார்த்தல் நடந்தது. தினமும் சுவாமிக்கு அபிஷேகமும், காலை, இரவு பூங்கரக ஊர்வலமும் நடந்தது. 14ம் தேதி பிடாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், 9வது நாள் விழாவாக நேற்று திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது. மகாதேவி மங்கலம், இல்லோடு, சண்டிசாட்சி, கோடிகொல்லை உட்பட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.